யாழிலிருந்து சட்டவிரோதமாக பயணிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை!

Tamils Jaffna Srilanka Bus
By Kajinthan Aug 12, 2026 12:19 AM GMT
Report

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு பயணிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் காவல்துறையினரும் இணைந்து விரைவில் இந்த விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அதன் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை...! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை...! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

பேருந்துச் சேவை

இதனுடன் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகளை இயக்கிவரும் பேருந்துகளுக்கு எதிராகவும், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்றி பணியாளர்களைப் போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்துச் சேவைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழிலிருந்து சட்டவிரோதமாக பயணிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை! | Crackdown On Unauthorized Jaffna Buses

இது தொடர்பாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாக விமலேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபட்டு வரும் மொத்தம் பத்து பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான சட்டவிரோத சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்து முறைமையை பாதிப்பதுடன் சட்டபூர்வமாக சேவையாற்றும் பேருந்து இயக்குநர்களுக்கும் அநீதி விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஏவுகணைகளால் அதிரும் உக்ரைன்...! ரஷ்யா மீது பகிரங்க குற்றச்சாட்டு

வடகொரிய ஏவுகணைகளால் அதிரும் உக்ரைன்...! ரஷ்யா மீது பகிரங்க குற்றச்சாட்டு

தொழிற்சாலைகள்

அத்தோடு, வடக்கு மாகாணத்தினுள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் ஏனைய பணியிடங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை பதிவு செய்து சட்டபூர்வமாக இயங்குவதற்காக போதுமான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழிலிருந்து சட்டவிரோதமாக பயணிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை! | Crackdown On Unauthorized Jaffna Buses

மேலும் தெரிவித்த அவர், “இந்த விசேட நடவடிக்கையின் போது வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படை அதிகாரிகளும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளும் மற்றும் காவல்துறையினரும் இணைந்து சம்பந்தப்பட்ட பேருந்துகளை பரிசோதித்து வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களை ஆய்வு செய்வதுடன் அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அனுமதியற்ற பேருந்துகள் சேவையை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கும் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன் அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனி சலுகை வழங்கப்படமாட்டாது” என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் விண்ணில் ஏவப்பட்ட 85 வினாடிகளில் வெடித்து சிதறிய விண்கலம்!

சீனாவில் விண்ணில் ஏவப்பட்ட 85 வினாடிகளில் வெடித்து சிதறிய விண்கலம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026