சீனாவில் விண்ணில் ஏவப்பட்ட 85 வினாடிகளில் வெடித்து சிதறிய விண்கலம்!
சீனாவில் விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலம் ஒன்று ஏவப்பட்ட 85 வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியுள்ளது.
சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் (Wenchang) ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட லாங் மார்ச் 7A (Long March 7A) விண்கலமே இவ்வாறு வெடிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்த விண்கலம் மூலம் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்த சோங்ஜிங்-4பி (Zhongxing-4B / ChinaSat-4B) என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் முழுமையாக அழிந்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு
உள்ளூர் நேரப்படி இரவு 8:02 மணிக்கு ஏவப்பட்ட இந்த விண்கலம், முதல் நிலை பிரிப்புக்கு (First-stage separation) முன்னரே வானில் ஒரு பெரிய தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியுள்ளது.

விண்கலம் பயணத்தின் போது அசாதாரண தொழில்நுட்பக் கோளாறு (flight anomaly) ஏற்பட்டதால் திட்டம் தோல்வியடைந்ததைச் சீனா உறுதி செய்துள்ளது.
விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
விண்வெளிப் பயணங்கள்
லாங் மார்ச் 7A விண்கலம் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் முதல் பயணமும் தோல்வியில் முடிந்தது.
China's Long March rocket launching an important military/civilian dual use satellite exploded during its launch from Hainan as curious kids were watching. A bad day for their scientists. Better luck next time. pic.twitter.com/RTVvcfpzGH
— Aravind (@aravind) August 10, 2026
அதன் பின்னர் தொடர்ச்சியாக வெற்றிகரமாக இயக்கப்பட்டு வந்த நிலையில், 2020-க்குப் பிறகு இந்த விண்கலம் சந்திக்கும் இரண்டாவது பெரிய தோல்வி இதுவாகும்.
சீன விண்வெளி நிலையத்திற்கு (Tiangong) சரக்குகளைக் கொண்டு செல்லும் லாங் மார்ச் விண்கலத்தின் தொழில்நுட்பங்களை இந்த விண்கலமும் பகிர்ந்து கொள்வதால் விபத்தின் காரணத்தைக் கண்டறியும் வரை சீனாவின் பிற விண்வெளிப் பயணங்கள் தாமதமாக வாய்ப்புள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |