இந்தியா மீது மற்றுமொரு குற்றச்சாட்டு : உடன் விசாரணைக்கு கனடா பிரதமர் உத்தரவு
இந்தியாவை, தேர்தலில் தலையிடும் வெளிநாட்டு அச்சுறுத்தல் என்று கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த கனடா பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தலில் தலையிடும் வெளிநாட்டு அச்சுறுத்தல்
வெளிநாட்டு தலையீடு மற்றும் தேர்தல்கள் என்ற தலைப்பில் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவை, தேர்தலில் தலையிடும் வெளிநாட்டு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு தலையீடு கனடாவின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுவே முதல் முறை
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த கனடா பிரதமர் உத்தரவிட்டுள்ளார். தேர்தலில் இந்தியா தலையிடுவதாக கனடா குற்றம் சாட்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்திருந்தது.
கனடாவில் காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18-ம் திகதி கொல்லப்பட்ட நிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |