18 வருட மணவாழ்க்கை முடிவிற்கு வந்தது - கனடா பிரதமரும் மனைவியும் பிரிவதாக அறிவிப்பு
கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோரியைப் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்கள் மூலம் தாம் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவர்களுக்கு சேவியர் (15), எல்லா கிரேஸ் (14), ஹாட்ரியன் (9) என்ற 3 குழந்தைகளும் உள்ளனர்.
ஒன்றாகக் கலந்து கொண்டனர்.

''அவர்கள் ஒரு நெருங்கிய குடும்பமாக இருக்கின்றார்கள், சோபியும் பிரதம மந்திரியும் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பான, அன்பான மற்றும் கூட்டுச் சூழலில் வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்'' என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ட்ரூடோ பிரதமரான பிறகு, அவரும் சோஃபியும் அடிக்கடி சமூக நிகழ்ச்சிகளிலும் வெளிநாட்டு பயணங்களிலும் ஒன்றாகக் கலந்து கொண்டனர். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், இதுபோன்ற பயணங்களைக் குறைத்துள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே ட்ரூடோவின் அப்பா பியர்ரி ட்ரூடோவும் தனது மனைவி மார்கரெட்டை 1979இல் பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.