மறைமுகமாக தாக்குவதை நிறுத்துங்கள் : ட்ரம்பிற்கு கனடா பிரதமர் பதிலடி
மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி பதிலடி கொடுத்துள்ளார்.
வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், ட்ரம்பின் 50% வரி விதிப்பு,ஒன்ராறியோ ஏரிக்கு பெயர் மாற்றம் மற்றும் பெண் ராணுவப் பயிற்சி அதிகாரிகளை பென்டகன் கேலி செய்ததைத் தொடர்ந்து, கனடா பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவை மீம்ஸ்களையும் மறைமுகமான விமர்சனங்களையும் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை
இது குறித்து மார்க் கார்னி தெரிவித்துள்ளதாவது,
பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தினால், அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கலாம்.

கனடா தொழில்துறைகள் படிப்படியாகச் சுருங்கி அழிந்துபோகும் வகையிலான நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைக்கிறது. நாங்கள் நிச்சயமாக அந்த நிபந்தனைகளை ஏற்கப் போவதில்லை. மீம்ஸ்களை உருவாக்குவதையும், மறைமுகமாகத் தாக்குவதையும் நிறுத்துங்கள்.
மற்றவர்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள்
மேலும் கடுமையாக நடந்துகொள்ள முயற்சிப்பதையும் நிறுத்துங்கள். மற்றவர்களைக் குறை கூறுவதை நிறுத்தி, தங்களை வலிமையானவர்களாகக் காட்டிக்கொள்ள முயற்சிப்பதை நிறுத்தினால், மீண்டும் நம்மால் வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |