கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள தபால் கட்டணங்கள்...!
கனடாவில் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கோரிக்கையை கனடாவின் தபால் திணைக்களம் அந்த நாட்டு அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைக்கமைய, தபால் முத்திரைகளின் விலைகள் 7 சதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளதாகத் கூறப்பட்டுள்ளது.
முத்திரைகளின் கட்டணங்கள்
கடந்த 2020 ஆம் ஆண்டில் முத்திரைகளின் கட்டணங்கள் 2 வீதத்தாலும், கடந்த 2019 ஆம் ஆண்டில் 5 வீதத்தாலும் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது கனடா தபால் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டால், முத்திரைகளின் விலை 99 சதங்களாக அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தபால் சேவை
இதேவேளை, அமெரிக்கா மற்றும் சர்வதேச தபால் சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உள்நாட்டு தபால் மற்றும் பதிவுத் தபால் கட்டணங்களும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், பணவீக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை கவனத்தில் கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |