விடுதலை புலிகளுக்காக நிதி திரட்டினாரா ஹரி ஆனந்தசங்கரி - வெடித்த புதிய சர்ச்சை

Sri Lankan Tamils Canada Gary Anandasangaree World
By Thulsi Sep 06, 2025 03:43 AM GMT
Thulsi

Thulsi

in கனடா
Report

விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டும் அலுவலகத்தை சோதனை செய்த போது கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் கனடாவின் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியின்  (Gary Anandasangaree) தொலைபேசி எண் காணப்பட்டதாக குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு ரோயல் கனடியன் மௌவ்ன்டட் காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய உலக தமிழ் இயக்க அலுவலகத்தை சோதனை செய்த போதே இந்த தொலைபேசி எண் கண்டுபிடிக்கப்பட்டதாக குளோபல் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆவணம் பற்றி அமைச்சருக்கு தெரியாது என்றும் அது தமிழீழ விடுதலைப் புலிகளின் கனேடிய முன்னணி அமைப்பின் அலுவலகத்தில் இருந்தது எப்படி என்று தெரியவில்லை என ஹரி ஆனந்தசங்கரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் லசந்தவை முடக்க கோட்டாபய அனுப்பியிருந்த ரிப்போலி படைப்பிரிவு!

ஊடகவியலாளர் லசந்தவை முடக்க கோட்டாபய அனுப்பியிருந்த ரிப்போலி படைப்பிரிவு!

ஆவணம் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது

இந்த ஆவணம் 2004 ஆம் ஆண்டு டிசெம்பர் 29 ஆம் திகதியிடப்பட்டதாக இருந்தது. அத்துடன் ஆழிப்பேரலையால் இலங்கையின் சில பகுதிகள் பேரழிவிற்கு உள்ளான மூன்று நாட்களுக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு  மனிதாபிமான உதவிகளை அனுப்ப அரசியல்வாதிகளை வற்புறுத்திய ஒரு குழுவில் அவர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

விடுதலை புலிகளுக்காக நிதி திரட்டினாரா ஹரி ஆனந்தசங்கரி - வெடித்த புதிய சர்ச்சை | Canada Public Safety Minister Phone No Controversy

ஹரி ஆனந்தசங்கரி அப்போது ஒரு சட்டக் கல்லூரி மாணவராக இருந்தார் என்றும் 'பேரழிவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கை மக்களுக்கு மனிதாபிமான நிவாரணத்தை ஆதரிப்பதற்காக இயக்கப்படும் முயற்சிகளை ஒழுங்கமைப்பதிலும் பங்கேற்பதிலும் முன்னணிப் பங்காற்றினார் என்றும் அவரின் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது என குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த ஆவணம் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து அமைச்சருக்கு எந்தத் தகவலும் தெரியாது. 

இந்த விடயம் குறித்து சட்ட அமுலாக்கல் பிரிவு ஒருபோதும் அமைச்சரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர் உலகத் தமிழ் இயக்கத்துக்காக ஒருபோதும் பணம் திரட்ட வில்லை என்றும் அவரது அலுவலகம் குறிப்பிட்டதாக குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது.

உயிரை உலுக்கும் காட்சி - கால் மடித்து அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு மீட்பு

உயிரை உலுக்கும் காட்சி - கால் மடித்து அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு மீட்பு

பணம் சேகரிக்கும் திட்டம்

ஹரி ஆனந்தசங்கரி லிபரல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

விடுதலை புலிகளுக்காக நிதி திரட்டினாரா ஹரி ஆனந்தசங்கரி - வெடித்த புதிய சர்ச்சை | Canada Public Safety Minister Phone No Controversy

இலங்கையின் தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் பணம் சேகரிக்கும் திட்டம் குறித்த பயங்கரவாத எதிர்ப்பு விசாரணையின் ஒரு அங்கமாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. 

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதியன்று இந்த ஆவணம் கண்டு பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஹரி ஏ." என்ற பெயருடன் ஆனந்தசங்கரி அப்போது பயன்படுத்திய தொலைபேசி எண்ணுடன் இந்த ஆவணம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  எனினும் ஹரி ஆனந்தசங்கரி எந்தத் தவறும் செய்ததாக அந்த ஆவணங்களில் கூறப்பட்டு இருக்கவில்லை.

வடக்கு - கிழக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கான வீடுகள்: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

வடக்கு - கிழக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கான வீடுகள்: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம்

14 Nov, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், காஞ்சிபுரம், India

04 Nov, 2024
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
மரண அறிவித்தல்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024