புலம்பெயர்தல் திட்டங்களை இடைநிறுத்தியுள்ள கனேடிய மாகாணம்!
கனடாவில் (Cabada) உள்ள கியூபெக் (Quebec) மாகாணமானது, இரண்டு முக்கிய புலம்பெயர்தல் திட்டங்களை இடைநிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, பொருளாதார புலம்பெயர்ந்தோர் மற்றும் சர்வதேச மாணவர்கள் இரண்டு முக்கிய முக்கிய புலம்பெயர்தல் திட்டங்கள் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு அத்தியாவசிய ஆவணமான கியூபெக் தேர்வு சான்றிதழ் (Quebec Selection Certificates - CSQs) வழங்குவதை இடைநிறுத்தியுள்ளது.
இதனால், வழக்கமான திறன்மிகுப் பணியாளர்கள் திட்டம் (Regular Skilled Worker Program) மற்றும் கியூபெக் அனுபவ திட்டத்துக்கான பட்டதாரி வழிமுறை (graduate stream of the Quebec Experience Program - PEQ) ஆகியவற்றுக்கு புலம்பெயர்ந்தோர் விண்ணப்பிப்பது பாதிக்கப்படும்.
புலம்பெயர்தல் திட்டம்
மாகாணத்தில் குடியேறும் புதியவர்கள் அதன் மொழி மற்றும் கலாச்சாரத்தை அச்சுறுத்துவதாக கூறி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடைநிறுத்தம் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும். கியூபெக் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில், கருத்து தெரிவித்துள்ள குடிவரவு அமைச்சர் Jean-François Roberge, “காணத்தில் பட்டம் பெற்ற வெளிநாட்டு மாணவர்களுக்கான நிரந்தர வதிவிடத்திற்கான பாதையான கியூபெக் அனுபவ திட்டத்திற்கான விண்ணப்பங்களை மாகாணம் உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது.
அதே போல், வழக்கமான திறமையான தொழிலாளர் திட்டத்தில் இருந்து விண்ணப்பதாரர்களை ஏற்றுக்கொள்வதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
இந்த இரண்டு திட்டங்களும் கியூபெக்கின் பெரும்பான்மையான பொருளாதார குடியேற்றவாசிகளை உள்ளடக்கியது, அவர்களுக்கான தேர்வு மாகாண அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |