தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு கிடைத்த இடம்
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடா(Canada) நான்காவது இடத்தை பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
U.S. News & World Report என்னும் அமெரிக்க ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலிலேயே கனடா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
73 நாடுகள் தரவரிசை
இதன்போது, சாகசம், கலாச்சார தாக்கம், தொழில் முனைவு, பாரம்பரியம், தொழில் செய்ய வெளிப்படைத்தன்மை, ஆற்றல் மற்றும் வாழ்க்கைத்தரம் முதலான பல்வேறு காரணிகளின் அடிப்படையில் 73 நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் ஒவ்வொரு காரணிக்கும் புள்ளிகள் வழங்கப்பட்தன் அடிப்படையில், 94.1 என்ற புள்ளிகளை கைப்பற்றி கனடா பட்டியலில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில், உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது. அத்துடன், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ஜப்பான் , அமெரிக்கா பெற்றுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |