ஹேக் செய்யப்பட்ட முஜிபுரின் வாட்ஸ்அப் கணக்கு: சிஐடியில் முறைப்பாடு
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான், தனது வாட்ஸ் அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) இணையக் குற்றப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டினை அவர் இன்றைய தினம்(28.10.2024) பதிவிட்டுள்ளார்.
ஹேக் செய்யப்பட்ட வாட்ஸ் அப் கணக்கு
குறித்த முறைப்பாடு தொடர்பில் அவர் ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,“எனது வாட்ஸ் அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதுடன் என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு பணம் கேட்டு வாட்ஸ் அப் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.
பணத்தை வைப்பு செய்ய இரண்டு வங்கி கணக்கு எண்களும் பகிரப்பட்டுள்ளன. இதுபற்றி எனது நண்பர் ஒருவர் மூலம் தகவல் கிடைத்தது.
அத்துடன், அந்த வங்கிக் கணக்குகளுக்கு எனது நெருங்கிய சகாக்கள் சிலர் பணத்தை அனுப்பவும் முயற்சித்துள்ளனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுத் தேர்தலில் போட்டியிடும் சில அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் ஒரு குழுவோ அல்லது தனி நபரோ இந்த இணையவழி ஊடான நிதி மோசடியில் ஈடுபடுவதாக முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |