புடினின் காதலி தொடர்பில் கனடா எடுத்துள்ள அதிரடி முடிவு
Vladimir Putin
Russian Federation
Canada
By Sumithiran
புடினின் இரகசிய காதலி
புடினுடைய இரகசிய காதலி என அழைக்கப்படும் அலீனா (Alina Kabaeva) மீது தடைகள் விதிக்க அமெரிக்கா முதலான நாடுகள் கூட தயங்கிய நிலையில் அதிரடியாக கனடா அவர் மீது தடைகளை விதித்துள்ளது.
இதனை கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly தெரிவித்துள்ளார்.
கனடா விதித்த தடை
சில நேரங்களில் கனடாவும் அதன் கூட்டணி நாடுகளும் ஒரே நேரத்தில் தடைகள் விதிப்பதில்லை. ஆனாலும், அவர்களுடைய அணுகல் ஒருங்கிணைந்து செய்யப்படுவதுதான் என்ற Mélanie Joly, சில நேரங்களில் நாங்கள் முதல் அடி எடுத்துவைக்கிறோம், சில நேரங்களில் அமெரிக்கர்களுடன் சேர்ந்து செயலாற்றுகிறோம், சில நேரங்களில் ஐரோப்பியர்களுடன் சேர்ந்து செயலாற்றுகிறோம், கடைசியில் G7 அமைச்சர்கள் ஒன்றுகூடும்போதுதான் நாம் ஒரே நபர் தொடர்பில் செயல்படுகிறோம் என்பது தெரியவருகிறது என்றார்.
