தமிழர்களின் இன அழிப்பிற்கு இதுவே ஆதாரம்.! ரவிகரன் எம்.பி வெளிப்படை
தமிழ் இனவழிப்பு விவகாரத்தில் கனடாவின் ஆதரவுக் கரங்களை இறுகப்பற்றிக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23.05.2025) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கவேண்டும் எனக் கோருகின்றேன். முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை இடம்பெற்று ஒன்றரை தசாப்தகாலம் கடந்திருக்கின்றது. பதினாறு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது.
இத்தகைய சூழவில் கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழ்இனப்படுகொலை என்னும் பேரவலத்தை நெருப்பாற்றை கடந்து எஞ்சிய உறவுகள் இறுதிப்போரின் வடுக்களோடும், போரின் கொடுமையான நினைவுகளைச் சுமந்தும் இறுதிப்போரின் சாட்சியாக, தமிழ்இனப்படுகொலையின் ஆதாரங்களாக எமது மண்ணில் வாழ்ந்து வருகின்றனர்.
தமக்கு மேற்கொள்ளப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவேண்டும், தமிழினப்படுகொலையை மேற்கொண்டவர்களுக்கும், துணை நின்றவர்களுக்கும் உரிய தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்பதே எமது எமது உறவுகளின் எதிர்பார்ப்பாகவுள்ளது. இருப்பினும் தமிழினப்படுகொலை இடம்பெற்று ஒன்றரைத் தசாப்தகாலங்கள் கடந்துவிட்டபோதிலும் எமது மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
எமது மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மற்றும், அநீதி இழைப்பதற்குத் துணைநின்றவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை.
இத்தகையசூழலில்தான் கனடாவின் பிரம்டன் நகரத்தில் சிங்க்கௌசி பூங்காவில், தமிழ்இனப் படுகொலையை நினைவுகூரும் வகையிலான தமிழ் இனஅழிப்பு, நினைவுத்தூபி கடந்த 10ஆம் திகதி பிரம்டன் நகரத்தின் மேயர் பற்றிக் பிரவுண் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் 16ஆண்டுகளாக தமிழ்இனப் படுகொலைக்கான நீதியைக்கோரிக்கொண்டு, காத்துக்கொண்டிருக்கும் எமது பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு கனடாவின் இச்செயற்பாடு புதிய தெம்பைத்தருவதாக அமைந்துள்ளது.
நீதி கிடைக்குமா என்று ஏங்கியிருக்கும் எமது உறவுகளுக்கு ஒரு நம்பிக்கையை தருவதாக உள்ளது.”என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
