நெதன்யாகுவை கைது செய்வேன்! கனடாவின் உறுதிமொழியால் அதிருப்தியில் இஸ்ரேல்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணைக்கமைய கனடா பிரதமர் மார்க் கார்னி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்வதாக வெளியிட்ட அறிவிப்பு பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவு தொடர்பில் கார்னி வெளியிட்ட தனது உறுதிமொழியைக் கைவிடுமாறு இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட பத்திரிகை ஒன்றின் நேர்காணலில், நெதன்யாகு கனடாவுக்கு வந்தால் போர்க்குற்றச்சாட்டில் கைது செய்வதாக அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.
கார்னியின் பதில்
இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய கார்னி "ஆம்" என்று பதிலளித்திருந்தார்.
இதன்படி குறித்த கருத்தானது இஸ்ரேலிய தரப்புக்கு தற்போது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஷோஷ் பெட்ரோசியன் கருத்து வெளியிடுகையில் "கார்னி இதை மறுபரிசீலனை செய்து, மத்திய கிழக்கில் உள்ள ஒரே யூத அரசு மற்றும் ஜனநாயக நாட்டின் தலைவரான பிரதமர் நெதன்யாகுவை கனடாவிற்கு வரவேற்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
காசா மோதல்
காசா மோதலில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக நெதன்யாகுவுக்கு ஐ.சி.சி கடந்த ஆண்டு பிடியானையை பிறப்பித்தது.
எனினும் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை நிராகரித்து காசாவில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்களை இஸ்ரேல் மறுக்கிறது .
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான கனடாவின் முடிவு "பயங்கரவாதத்திற்குக் கிடைத்த பரிசு". அது "கனடாவில் யூத எதிர்ப்புத் தீயில் எண்ணெய் ஊற்றியுள்ளது" என்றும் பெட்ரோசியன் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
