கனடாவில் தொடரும் சைபர் தாக்குதல்கள்: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
கனடாவில் நீர், விவசாயம் மற்றும் சக்திவளத்துறைகளுக்கு அவசர எச்சிரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், குறித்த துறைகள் மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பை கனடிய இணைய பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ளது.
அமைப்புகள்
இதனடிப்படையில், இணயைத்தில் ஊடுறுவல்களை மேற்கொண்டு தாக்குதல்களை மேற்கொள்ள முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் இணையத்தின் மூலம் அணுகக்கூடிய கட்டுப்பாட்டு அமைப்புகள் மீது பல தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஊடுறுவல் முயற்சி
இந்த ஊடுறுவல் முயற்சிகள் தொடர்பில் விசாரணகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் குறிப்பாக நீர், உணவு மற்றும் உற்பத்தித் துறைகள் போன்ற சைபர் பாதுகாப்பு ஒழுங்குமுறை இல்லாத துறைகள் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |