கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் கனடா (Canada) சுமார் 121, 160 நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் 52,720 பேர் ஒன்டாரியோவிலும் (Ontario) 17,745 பேர் பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் (British Columbia) நிரந்தர குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர்.
எனினும், கடந்த ஆண்டில் குறித்த காலப்பகுதிக்குள் சுமார் 145,495 பேர் நிரந்தர குடியிரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர குடியிரிமை
இந்த நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு, கனடாவில் குடியேருபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த ஆண்டை விட அதிகளவானோர் நிரந்தர குடியுரிமையை பெற்றுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுமார் 135,291 பேருக்கு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதிக்குள் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கான அங்கீகாரம் மற்றும் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 36,635 பேருக்கு எக்ஸ்பிரஸ் நுழைவு அமைப்பின் கீழ் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

