வாக்குவங்கி அரசியலை முன்னெடுக்கும் கனடா-அலிசப்ரி குற்றச்சாட்டு
Ali Sabry
Sri Lanka
India
Canada
By Sumithiran
கனடா வாக்குவங்கி அரசியலை முன்னெடுக்கின்றது என்ற இந்தியாவின் கருத்தினை இலங்கை ஆதரித்துள்ளது.
காலிஸ்தான் விவகாரத்தை கனடா வாக்குவாங்கி அரசியலை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சமூக ஊடகமொன்றில் வெளியிட்டுள்ள காணொளியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் கனடா வாக்குவங்கி அரசியலை நோக்கமாக கொண்டு செயல்படுகின்றது போல தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இதனை தனது டுவிட்டர் பதிவில்ஆமோதித்துள்ளார்.
வாக்குவங்கி அரசியல் தவிர வேறு என்ன என அலிசப்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிய மதியநேர செய்திகளின் காணொளியை காண்க
