ட்ரம்புடன் பேச்சு : கனடா பிரதமர் எடுத்த முடிவு
Donald Trump
Canada
Mark Carney
By Sumithiran
அமெரிக்காவுக்கு(us) இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் (donald trump)அறிவித்துள்ள நிலையில் கனடா (canada)மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மையை உருவாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டொனால்ட் ட்ரம்புடன் விரைவில் பேச்சு
இந்நிலையில், கனடாவின் புதிய பிரதமரான மார்க் கார்னி(mark carney) இன்று(27) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.
நிச்சயமாக அடுத்த ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் கனடாவின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
