தென்னிலங்கையில் இன்று காலை துப்பாக்கி சூடு
வீடொன்றில் இருந்த நபர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று (31) அதிகாலை அம்பலாந்தோட்டை (Ambalantota) - காவல்துறை பிரிவின் கொக்கல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது
காயமடைந்தவர் அம்பலாந்தோட்டை, கொக்கல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
காயமடைந்த நபருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் நீண்ட காலமாக இருந்த வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்காக அம்பலாந்தோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
