கனேடிய விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
கனேடிய(canada) விமான பயணிகள் தாக்கல் செய்த வழக்குக்கு சார்பான வகையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான பயணங்கள் தாமதமாவது மற்றும் பயண பொதிகள் சேதமடைதல் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பயணிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கனேடிய விமான பயணிகளின் உரிமைகளை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் சில விமான சேவை நிறுவனங்கள் மேன்முறையீடு செய்திருந்தன.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
அதன்படி, எயார் கனடா, போர்ட்டர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட மேலும் 16 சர்வதேச விமான நிறுவனங்கள் இந்த மேல்முறையீட்டை செய்திருந்தன.
இந்நிலையில், குறித்த விமான சேவை நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தாக்கல் செய்த மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதனைதொடர்ந்து, இறுதி நேரத்தில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது விமான பயண பொதிகள் காணாமல் போனாலும் அதிக நட்டையிட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
பயணிகளின் உரிமைகள்
இதன்படி, உச்சநீதிமன்றின் இந்த தீர்ப்பு கனேடிய விமான பயணிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
அத்துடன், விமான பயணிகளின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கனேடிய போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கனேடிய விமான சேவை நிறுவன ஒன்றியம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |