மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கனேடியத் தூதுவர் சந்திப்பு!

Ampara Batticaloa Canada
By Independent Writer May 02, 2026 02:36 PM GMT
Report
Courtesy: NOORUL HUTHA UMAR

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் இசபெலா மார்டின் , மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை (02.05.2026) நண்பகல் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் காரியாலயத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து தூதுவருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.

பிரதேச மக்களின் குறைபாடு

இச்சந்திப்பில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன் மற்றும் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் உள்ளூராட்சி மன்றத் தலைவர்களான இந்திரன் ரூபசாந்தன் (நாவிதன்வெளி), சுப்பிரமணியம் பாஸ்கரன் (காரைதீவு) மற்றும் தர்மதாஸ ஆரியதாஸ (ஆலையடிவேம்பு) ஆகியோரும் பங்கேற்றுத் தூதுவருடன் கலந்துரையாடினர்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கனேடியத் தூதுவர் சந்திப்பு! | Canadian Ambassador Visit Ampara

இக்கலந்துரையாடலின் போது பிரதேச சபை தவிசாளர்கள், தூதுவரிடம் பிரதேச மக்களின் குறைபாடுகளை தூதுவர் இசபெலா மார்டின் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தமது பிரதேசங்கள் அபிவிருத்தியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், திட்டமிட்ட ரீதியில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு

இப்பிரதேச இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கனேடியத் தூதுவர் சந்திப்பு! | Canadian Ambassador Visit Ampara

உலகப் பொருளாதாரப் போக்குகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த கனேடிய அரசு போதிய உதவிகளை வழங்க வேண்டும் என தவிசாளர்கள் தூதுவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்கள்.

A9 வீதியில் திடீர் வாகன பரிசோதனை

A9 வீதியில் திடீர் வாகன பரிசோதனை

கனேடிய தூதுவரின் உறுதிமொழி

பிரதேச மக்களின் வாழ்வாதாரம், கல்வி மற்றும் பொருளாதார ரீதியிலான பின்னடைவுகளைக் கேட்டறிந்த கனேடியத் தூதுவர், இக்கோரிக்கைகள் தொடர்பில் தனது கவனத்தைச் செலுத்துவதாகத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கனேடியத் தூதுவர் சந்திப்பு! | Canadian Ambassador Visit Ampara

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் தற்போதைய களநிலைவரங்களை நேரடியாகக் கேட்டறிந்த இந்தச் சந்திப்பு, இப்பிரதேசங்களின் எதிர்கால மேம்பாட்டிற்கு மிக முக்கியமானது எனப் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

திருக்கோணேஸ்வரா ஆலய காணி விவகாரம் : தொடுக்கப்பட்டது வழக்கு

திருக்கோணேஸ்வரா ஆலய காணி விவகாரம் : தொடுக்கப்பட்டது வழக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்