கனடா குடிமக்களுக்கு காஷ்மீருக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை
India
Canada
Jammu And Kashmir
By Dilakshan
காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் கொலை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கனடா குடிமக்களை காஷ்மீருக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல், பயங்கரவாதம், கடத்தல் போன்ற எதிர்பாராத சூழல்கள் நிலவுவதாகவும் பிரச்சினைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கனடா குடியுரிமை பெற்று அந்நாட்டில் வசித்துவந்த ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார்.
குற்றச்சாட்டு
இந்நிலையில் கனடாவில் நடைபெற்ற கொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார்.
கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளதுடன், இந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது மற்றும் உள்நோக்கம் கொண்டது எனவும் தெரிவித்துள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்