ரஷ்யாவை தோற்கடிக்க இணையுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு
ரஷ்யாவை தோற்கடிப்பதே உலக அமைதிக்கான ஒரே உத்தரவாதம் என மேற்குலகத் தலைவர்கள் முன்வைத்த செய்தியுடன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அரச தலைமைகளின் இரண்டாம் நாள் அமர்வு தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நியூயோர்க்கில் இடம்பெற்ற ஜி 7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் அமர்வில் ரஷ்யாவும் வட கொரியாவும் இணைந்து எடுக்ககூடிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பெரும்கவலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் உலக தலைவர்கள் பங்கெடுக்கும் வருடாந்த பொதுச்சபைஅமர்வு நேற்று முதல் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த அமர்வில் நேற்று உரையாற்றிய உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவை தோற்கடிக்க இணையுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அமெரிக்க அதிபர்
ரஷ்யாவின் படையெடுப்பு வெறுமனவே உக்ரைன் மீதான போர் மட்டுமல்ல அது உலக நாடுகள் மீதான ஒரு போர் என்பதால் ரஷ்யா என்ற ஆக்கிரமிப்பு நாட்டை தோற்கடிக்க உலகம் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டுமெனவும் ஜெலென்ஸ்கியின் கோரிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த சவாலை எதிர்கொள்வதில் சகல திறன்களும் ஆற்றல்களும் ஒருமுகப்படுத்தப்பட்டு ரஷ்ய ஆக்கிரமிப்பு கட்டுப்படுத்தப்படவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை பொதுச்சபையின் வரவேற்பு நிகழ்ச்சியில், உரையாற்றி அமெரிக்க அதிபர் பைடன் ரஷ்யபடையெடுப்பு உள்ளிட்ட உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில உலகத்தலைவர்கள் வழங்கிய பணிக்காக நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது எடுக்கப்படும் முடிவுகள் வரவிருக்கும் பல தசாப்தங்களுக்கு உலகின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவதாகவும் பைடன் கூறியுள்ளார்.