கனேடிய இராணுவத்தில் சாதித்த யாழ்ப்பாண மைந்தன்! (காணொளி)
கனேடிய பாதுகாப்புப் படையில் 25 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியமைக்காக உயர் மதிப்புறு விருதான Canadian Forces’ Decoration (CD) First Clasp என்னும் சிறப்பு விருதினை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதியாபரணம் வாகீசனிற்கு கனடிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
கனேடிய அரச சார்ந்த கௌரவத்தைப் பெற்ற அவர் தற்பொழுது கனேடிய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ஒரு சிரேஷ்ட நிதியியல் சேவைகள் நிர்வாகியாக பணியாற்றி தற்போது மனிடோபாவில் முதுநிலை நிதியியல் அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உருவாக்கிய மாணவர்களில் 1983 தொடக்கம் 1988 வரையிலான காலப்பகுதியில் சிறப்புகள் நிறைந்த மாணவராக விளங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கனேடிய இராணுவ பயிற்சிக் கல்லூரியில் இணைந்து பட்டம் பெற்று 1995ஆம் ஆண்டு கனேடிய இராணுவத்தில் இணைந்து கொண்டார். அதன் தொடர்ச்சியான காலப் பகுதியில் கனடாவின் பாதுகாப்புப் படையின் சார்பில் ஐக்கிய நாடுகள் சபையிலும், நேட்டோ நாடுகளின் சமாதானப் படையிலும் பணியாற்றுவதற்கு அழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் முழுமையான காணொளி,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
