அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி : கனடாவின் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க (America) பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக கனடா (Canada) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனா (China), கனடா (Canada), மற்றும் மெக்சிகோ (Mexico) ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு அமெரிக்கா மற்றும் கனடா வர்த்தக உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் வரி
இதற்கு பதிலடியாக கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), மார்ச் நான்காம் திகதி முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடி என்ற வகையில் பார்க்கப்படுவதுடன் , கனடாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதித்ததோ அதே அளவு கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்துள்ளது.
அமெரிக்காவுக்கு பதிலடி
ஏற்கனவே, சீனாவும் அமெரிக்காவுக்கு பதிலடியாக அதிக வரி விதிப்பு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இப்போது மெக்சிகோவும் இதே போன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், கனடாவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் அமெரிக்க வியாபாரிகள் பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அண்டை நாடுகளுடன் நட்புடன் இருந்தாலே தொழில் சாத்தியமாகும் எனவும் இதை அமெரிக்க அதிபர் யோசிக்க வேண்டும் எனவும் வணிக வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
ஆனால், போதைப் பொருள் கடத்தலுக்கு இந்த மூன்று நாடுகளும் ஆதரவளிக்கின்றன என அமெரிக்கா குற்றம் சாட்டியதால், வரி விதிப்பை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்ய முடியாது என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 6 மணி நேரம் முன்
