காசாவில் கனேடிய நாட்டவர் மாயம், கடத்தப்பட்டாரா..!
Canada
Israel-Hamas War
Gaza
By Sumithiran
கடுமையான போர் இடம்பெற்றுவரும் காசா பிராந்தியத்தில் பலஸ்தீன – கனடிய பிரஜையான மன்சூர் சௌமான் என்ற ஊடகவியலாளர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.
காசாவில் இடம்பெற்று வரும் மனிதாபிமான நடவடிக்கைகளை பதிவு செய்யும் நடவடிக்ககைளில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் காணாமல் போயுள்ளார்.
கடத்திச் செல்லப்பட்டதாக
தென் காசா பிராந்தியத்தின் நாசர் வைத்தியசாலை பகுதியில் செளமானை இறுதியாக கண்டதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
சௌமான் கடத்திச் செல்லப்பட்டதாக நேரில் கண்ட சிலர் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கனடிய வெளிவிவகார அமைச்சு
சௌமான் காணாமல் போன விவகாரம் தொடர்பில் கனடிய வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. நிலைமைகள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்