பிறந்தநாள் பரிசாக கணவர் கொடுத்த லொத்தர் சீட்டு : ஒரே நாளில் கோடிஸ்வரியான கனேடிய பெண்
கணவர் பிறந்தநாள் பரிசாக மனைவிக்குக் கொடுத்த லொத்தர்சீட்டால் ஒரே நாளில் கனேடியப் பெண் ஒருவர் கோடீஸ்வரியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் மனித்தோபா மாகாணத்தின் தலைநகரான வின்னிபெகில் வாழும் கிறிஸ்டல் (Krystal McKay), என்ற பெண்ணே லொதத்தர்சீட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
பிறந்தநாள் பரிசு
இவர் தனது கணவரான லோரன்ஸிடம் (Lawrence Campbell), லொத்தர்சீட்டு ஒன்று வாங்கி வரும்படி பல வாரங்களாகவே கூறிக்கொண்டிருந்துள்ளார்.
ஒருநாள், கிறிஸ்டலுக்கு பிறந்தநாள் பரிசாக லொத்தர்சீட்டு ஒன்றை லோரன்ஸ் வாங்கிக்கொடுத்துள்ளார்.
பிறந்தநாள் பரிசாக வந்த அந்த லொத்தர்சீட்டு, கிறிஸ்டலின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ஆம், அவர் வாங்கிய லொத்தர்சீட்டுக்கு 5 மில்லியன் டொலர்கள் பரிசாகக் கிடைத்துள்ளது.
கோடீஸ்வர தம்பதி
இதன்காரணமாக ஒரே நாளில் கிறிஸ்டல் கோடீஸ்வரியாகிவிட்டார்.
பெரும்பாலான சாதாரண மக்களைப்போலவே, சொந்தமாக ஒரு வீடு வாங்கவேண்டும் என்பதுதான் கிறிஸ்டல் குடும்பத்தினரின் ஆசையாக இருந்த நிலையில், அதனுடன் இணைந்ததாக , டிஸ்னி லாண்டுக்கும் சுற்றுலா செல்லவேண்டும் என்ற ஆசையும் இவர்களுக்கு இருந்தது.
இந்நிலையில் இந்த இரண்டு ஆசைகளையும் இந்த பரிசின் மூலமாக நிறைவேற்றவுள்ளதாக இந்த கோடீஸ்வர தம்பதிகள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |