பிரித்தானியாவில் நாமலுக்கு புகட்டப்பட்ட பாடம்! கவலையில் முக்கிய புள்ளி
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்து கொள்ளவிருந்த ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் விரிவுரைகள் ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற விவாத சங்கங்கள் பல தலைமுறைகளாக துணிச்சலான விவாதம் மற்றும் பகுத்தறிவு கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான அடையாளங்களாக நிற்கின்றன என்று முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த தலைமுறை ஈழத்தமிழர்களின் பலத்தை சிங்கள தேசத்திற்கு படம்போட்டுக்காட்டிய நாமலின் பிரித்தானிய பயணம்!
சிவில் சமூகத்தில் பிளவு
கேம்பிரிட்ஜ் சங்கத்தில் உரையாற்றிய தனது சொந்த அனுபவத்தை நினைவு கூர்ந்த அலி சப்ரி, இத்தகைய தளங்கள் வேறுபாடுகளை வெளிப்படையாகவும், மரியாதையுடனும், அறிவுசார் நேர்மையுடனும் எதிர்கொள்ள ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றன என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் அழுத்தம் காரணமாக நிகழ்வை ரத்து செய்வது வருந்தத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது அவை சிவில் சமூகத்தில் பிளவுகளுக்கு வழிவகுக்கிறது என்றும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்களால் இலங்கையின் எதிர்காலமும் உண்மையான நல்லிணக்கமும் தடைபடுகிறது என்றும், எதிர்க்கும் கருத்துக்களைக் கொண்டவர்களைச் சந்திக்கவும், கேள்வி கேட்கவும், கேட்டறிந்து கொள்ளவும் விருப்பம் இருக்க வேண்டும் என்றும், அந்தக் குரல்களை அடக்குவது ஜனநாயகத்தை முன்னேற்றாது எனவும் பல்கலைக்கழகங்கள் நிலைநிறுத்த விரும்பும் கொள்கைகளை அழிக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |