சிற்றூழியரை தாக்கிய விசேட வைத்திய நிபுணர் கைது : நீதிமன்றம் அளித்த உத்தரவு
Sri Lanka Police
SL Protest
Hospitals in Sri Lanka
By Sumithiran
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர் மற்றும் பெண் ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டுள்ளார்.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு பொறுப்பான நிபுணரே கைது செய்யப்பட்டவராவார்.
சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை
சந்தேக நபர் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இதனை கருத்திற்கொண்ட நீதவான் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரை அவதானித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குடிபோதையில் இருந்தாரா..!
இரண்டு இளநிலை ஊழியர்கள் தாக்கப்பட்டபோது சம்பந்தப்பட்ட மருத்துவர் குடிபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 4 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்