கஞ்சா வளர்ப்பு : அமைச்சர்களிடையே வெடித்தது முரண்பாடு
கஞ்சாவை மருந்தாக வளர்த்து ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (06) தெரிவித்த போதிலும் கடந்த வருடமே அமைச்சரவை அனுமதி கிடைத்ததாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற அமர்வுக்கு வருகை தந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கஞ்சா வளர்க்கப்பட்டு மருந்தாக ஏற்றுமதி
திரிலோக விஜய பத்ரா என ஆயுர்வேதத்தில் அழைக்கப்படும் கஞ்சா செடி இலங்கையில் வளர்க்கப்பட்டு மருந்தாக ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே கடந்த 5ஆம் திகதி அறிவித்திருந்தார்.
மறுதலித்த பந்துல குணவர்தன
எனினும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்வாறான அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |