மூன்றாம் உலகப் போர் : அச்சம் வெளியிட்டுள்ள உலக நாடுகள்
உக்ரைனுக்குப் பிறகு போலந்து நாட்டை ரஷ்யா தாக்கலாம் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், இது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கமாக இருக்கும் என உலக நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளன.
உலக நாடுகள் எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் தொடர் போர் நிலையை எதிர்நோக்க வேண்டி ஏற்படுமென பிரித்தானியா பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
சீனா, வட கொரியா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் குறித்த போரில் பங்கு வகிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போலந்து மீதான தாக்குதல்
இந்த நிலையில், ரஷ்யா தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதால் போருக்கான தயாராகும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாக போலந்து பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
போலந்து மீது ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டாரல், அது மூன்றாம் உலகப் போரையே தொடங்கி வைக்கும் நிகழ்வாக அமைந்துவிடும்.
மூன்றாம் உலக போர்
போலந்து மீது ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்தால், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நேட்டோ நாடுகளும் நேரடியாக போலந்துக்கு தனது ஆதரவை வழங்கும்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக படையெடுக்கும் பட்சத்தில், ரஷ்யா தனது நட்பு நாடுகளை ஒன்றிணைத்து பதில் தாக்குதல்களை ஆரம்பிக்கும்.
இது அடுத்த உலகப் போருக்கு வித்திடும் வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |