தமிழ் நாட்டில் சிக்கிய இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஆபத்தான பொருள்!
Tamil nadu
Sri Lanka
Tamil Nadu Police
By Dilakshan
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் காவல்துறையினர் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்த தயாராக வைக்கப்பட்டிருந்த 194 கிலோகிராம் கஞ்சாவை கண்டுபிடித்துள்ளனர்.
97 மூட்டைகளில் பொதி செய்யப்பட்டிருந்த கஞ்சா, ஒரு ரகசிய தகவலின் பேரில் ECR கடற்கரை சாலையில் நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது, வாகனத்தையும் 40 வயதுடைய ஓட்டுநரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சட்ட நடவடிக்கைகளுக்காக ராமநாதபுரம் போதைப்பொருள் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த போதைப்பொருளுடன் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி