முல்லைத்தீவில் 3 கோடி பெறுமதியான கஞ்சா மீட்பு
கடத்துவதற்கு தயாராக இருந்த சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகள் விசேட சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, சாலைக் கடற்கரைப் பகுதியில் வைத்தே பொதிகளை நேற்று (17) கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மீட்டுள்ளனர்.
முல்லைத்தீவு - சாலைக் கடற்கரை ஊடாகக் கஞ்சா கடத்தப்படவுள்ளதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது 'மஹேந்திரா கெப்' ரக வாகனமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 140 கிலோ 460 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கைது செய்வதற்கான நடவடிக்கை
இதன்போது சந்தேக நபர் தப்பியோடியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா பொதிகளும் வாகனமும் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இவை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்