டின் மீன் விலைகளில் மாற்றம்: வெளியான தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
Fish
By Shalini Balachandran
டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அடிப்படையில் இன்று (15) விலை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில்லறை விலை
இதனடிப்படையில், 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின் மீனின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 425 கிராம் நிறையுடைய மெக்கரல் 480 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 425 கிராம் நிறையுடைய ஜெக் மெக்கரல் 560 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |