பெல்ஜிய தலைநகரில் வெடித்த பாரிய போராட்டம்: கனரக வாகனங்களுடன் வீதிக்கு இறங்கிய விவசாயிகள்

Belgium World
By Dhilak Feb 01, 2024 11:01 AM GMT
Report

ஐரோப்பிய ஒன்றியத்தின் விவசாய விதிகளுக்கு எதிராக பெல்ஜிய தலைநகர் பிரசல்ஸ்சில் விவசாயிகள் பாரிய எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய மாநாடு நடைபெறும் நிலையில், பிரசல்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை முற்றுகையிட்டு முடக்கும் நோக்குடன் அவர்கள் இந்த பேரணியை நடத்திவருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டை முன்னிட்டு பிரசல்ஸ்சில் உள்ள சுரங்கப் பாதைகள் மற்றும் நகரில் உள்ள பல வீதிகள் மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

செனட் விசாரணையில் மன்னிப்பு கேட்ட மார்க் சக்கர்பெர்க்

செனட் விசாரணையில் மன்னிப்பு கேட்ட மார்க் சக்கர்பெர்க்


மோசமடையும் நிலைமை

இதன்காரணமாக ஏற்கனவே போக்குவரத்து தாமதங்கள் காணப்படும் நிலையில், விவசாயிகளின் போராட்டம் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

பெல்ஜிய தலைநகரில் வெடித்த பாரிய போராட்டம்: கனரக வாகனங்களுடன் வீதிக்கு இறங்கிய விவசாயிகள் | Capital Of Belgium Massive Protest By Farmers

ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதியை சூழ ஆயிரத்து 300 வரையான விவசாய கனரக வாகனங்கள் அணி வகுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக காவல்துறையினரின் தடைகளை தகர்த்து ஐரோப்பிய நாடாளுமன்றம் நோக்கி செல்வதற்கு இன்று காலை 10.30 அளவில் விவசாயிகள் முயன்றுள்ளனர்.

எதிர்ப்பு போராட்டம்

இதன்போது காவல்துறையினர் விவசாயிகள் மீது நீர்த் தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டகாரர்கள் பதிலுக்கு முட்டைகள், மதுபான போத்தல்கள், எரிகுண்டுகளை வீசியும் டயர்களை எரித்தும் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

பெல்ஜிய தலைநகரில் வெடித்த பாரிய போராட்டம்: கனரக வாகனங்களுடன் வீதிக்கு இறங்கிய விவசாயிகள் | Capital Of Belgium Massive Protest By Farmers

இதன்காரணமாக நாடாளுமன்ற வளாகத்தை சூழவுள்ள அனைத்துப் பகுதிகளிலும் தீ எரியும் அதேவேளை கரும்புகையும் பரவியுள்ளது.

குப்பைகள் மற்றும் தீப் பிழம்புகளுக்கு நடுவே பெல்ஜியத்தின் உருக்கு தொழில்துறையின் முன்னோடியாகவும் முக்கிய தொழிலதிபராகவும் கருதப்படும் ஜோன் கொக்கறல்லின் சிலையின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்து கிடக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், மிகக் கடுமையான ஐரோப்பிய விதிகள், உற்பத்தி பொருட்களுக்கான குறைந்த விலைகள் மற்றும் நிர்வாகச் சுமை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி விவசாயிகள் இந்த எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் வேட்பாளர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் வேட்பாளர் சுட்டுக்கொலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026