அரசியல்வாதியும் நடிகருமான விஜயகாந்த் மரணம்: இரங்கல் வெளியிட்டுள்ள இலங்கை தமிழ் அரசியல்வாதிகள்
தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மரணத்திற்கு இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் வாதிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந் இன்று(28) உடல்நலக் குறைவால் காலமானார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, அதன் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தவர்.
அதன்பின் 2005-ஆம் ஆண்டில் தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கி, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயர்ந்த நிலையை அடைந்தவர்.
விஜயகாந்த் மரணம்
விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்திருந்தார்.ஆகவே கடந்த மாதம் விஜயகாந்த் உடல்நல பின்னடைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையின் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் மீண்டும் நேற்று(27) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதில், வழக்கமான பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனை அழைத்து வரப்பட்டுள்ளார் எனவும், பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை அரசியசியல்வாதிகள்
இந்நிலையில் இவரது மரணம் மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு இலங்கை அரசியசியல்வாதியான மனோகணேசன் இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானும் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Goodbye Vijay! Our deepest sympathies.#கெப்டன் #விஜயகாந்த்
— Mano Ganesan (@ManoGanesan) December 28, 2023
சூறாவளியாக எழுந்தார். திடீரென அமைதி தென்றல் ஆனார். புரட்சி தமிழ் நடிகர், எழுச்சி அரசியலர் என்ற பிரபலங்களை மீறி #சிறந்த #மனிதர் என அறியப்பட்டார். #தேதிமுக தலைவருக்கு ஆழ்ந்த அஞ்சலி!#மனோகணேசன் தலைவர்- #தமுகூ pic.twitter.com/5ir1oJnjiZ
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |