ரஷ்ய படைஅதிகாரிகள் பயணித்த கார் வெடித்து சிதறியது (காணொளி)
ரஷ்ய உயரதிகாரிகள் பயணித்த கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கார் வெடித்துச் சிதறியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட Oleshky, Kherson Oblast பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில்
இந்த தாக்குதலில் FSB படை வீரர் ஒருவர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டதுடன் மற்றவர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.காருக்கு பாதுகாப்பாக இருந்த ரஷ்ய வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
В Олешках на Херсонщині підірвали авто з російськими ФСБшниками та військовими - джерела "Української правди" в СБУ pic.twitter.com/2bOFZ4de2X
— Українська правда ✌️ (@ukrpravda_news) September 7, 2023
உக்ரைன் படைத்தரப்பு இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட ஸ்காடோவ்ஸ்கில், வடிகட்டுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உக்ரைனிய குடிமக்களை சித்திரவதை செய்வதற்கும் அவர்கள் ஓலேஷ்கிக்கு வருகை தந்ததாக உக்ரைன் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.