பலரது கவனத்தை ஈர்த்த இலங்கையில் தயாரிக்கப்படும் புதியவகை ‘காட்போட்’ சவப்பெட்டி
தெஹிவளை கல்கிசை மாநகர சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘காட்போட்’சவப்பெட்டிகள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொவிட் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த புதிய கண்டுபிடிப்பு முயற்சியை தாம் தொடங்கியதாக மாநகரசபையின் முதல்வர் பிரியந்த சகபந்து தெரிவித்தார்.
இந்த காட்போட் சவப்பெட்டி தற்போது ரூ .4,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையில் மலிவான மரப்பெட்டியிலான சவப்பெட்டி ரூ .25,000 முதல் ரூ .30,000 வரை விற்கப்படுகிறது. இந்த காட்போட்டிலான சவப்பெட்டி மறுசுழற்சி செய்யப்படும் எனவும் 100 கிலோகிராம் எடுத்துச் செல்ல முடியும் என்றும் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
கொவிட் உடல்களுக்காக இதை முதலில் வடிவமைத்த பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இப்போது தங்கள் கவனத்தை பெட்டியின் மீது திருப்பிவிட்டனர்.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்த பெட்டிகள் சுமார் 350 விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார் சஹபந்து.






