மிச்செல் பெச்லெட்டை சந்தித்தார் கொழும்பு பேராயர்
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று ஜெனிவாவில் வைத்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்சேல் பெச்லெட்டை சந்தித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அவர் விளக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கொழும்பு பேராயர், பரிசுத்தப் பாப்பரசர் பிரான்சிஸ்சை வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் நடந்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.