செங்கடலில் சரக்கு கப்பல் மீது ஆயுததாரிகள் தாக்குதல்
Yemen
Ship
England
By Jaso
ஏமனின் செங்கடல் கடற்கரைக்கு அப்பால் இன்று(05)ஞாயிற்றுக்கிழமை ஒரு சரக்குக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது என இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் (UKMTO) மையம் தெரிவித்துள்ளது.
அல் ஹுதைதாவிற்கு தென்மேற்கே 30 கடல் மைல் தொலைவில் ஒரு சம்பவம் நடந்ததாக தங்களுக்கு அறிக்கை கிடைத்துள்ளதாக UKMTO கூறியது.
அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் தாக்குதல்
"அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய தாக்குதல்தாரிகளால் தாக்கப்படுவதாக ஒரு சரக்குக் கப்பல் ஆபத்து எச்சரிக்கையை விடுத்துள்ளது," என்று அது சமூக ஊடக நிறுவனமான X-இல் மேலும் தெரிவித்தது.

இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும், அப்பகுதியில் இயங்கும் கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், "சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நடவடிக்கையையும்" தெரிவிக்குமாறும் அந்த முகமை வலியுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்