மழைக்கு மத்தியில் மரக்கறி விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
கெப்பிட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் தற்போது அதிகளவான மரக்கறிகள் வருவதனால் கரட், முட்டைகோஸ் உட்பட பல வகையான மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்து விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கெப்பிட்டிபொல விசேட பொருளாதார நிலைய விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடெங்கிலும் மலையக மரக்கறிகளை விநியோகிக்கும் பிரதான பொருளாதார மத்திய நிலையமான கெப்பெட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் தினமும் வருகின்றனர்.
காய்கறிகளை பயிரிட விவசாயிகள் ஆர்வம்
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக உருளைக்கிழங்கு பயிரிடுவதற்கு அதிகளவு பணம் செலவழிக்க வேண்டியுள்ளதால் உருளைக்கிழங்குக்கு பதிலாக காய்கறிகளை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மரக்கறிகளின் விலைகள்
தற்போது கரட் 50-60 ரூபாயாகவும், முட்டைகோஸ் 35-40 ரூபாயாகவும், கத்தரிக்காய் 45-60 ரூபாயாகவும் உள்ளன. சில வகை மரக்கறி வகைகளை கூட விற்பனை செய்ய முடியாத பின்னணியில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 250-260 ரூபாவாகவும், ஒரு கிலோ மிளகாய் 480-500 ரூபாவாகவும், பீன்ஸ் கிலோ 300-350 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |