மீண்டும் உச்சம் தொட்ட கரட்டின் விலை
நாட்டில் மீண்டும் கரட் கிலோ கிராம் ஒன்றின் 230 ரூபாவால் அதிகரித்துள்ளது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய பொது சந்தையில் இன்று(23) கொள்வனவு செய்யப்படும் மரக்கறி விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கரட் கிலோ கிராம் ஒன்றின் விலை திடீரென 230 ரூபாவால் உயர்ந்துள்ளது.
மரக்கறிகளின் விலை
கடந்த சில நாட்களாகவே, மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், கரட்டின் விலை உச்சத்தில் இருந்தது.
அதற்கமைய 2000/= ரூபாவுக்கு அதிகமாக விற்கப்பட்ட கரட்டின் விலை கடந்த மூன்று நாட்களாக கிலோவுக்கு 900/= ரூபாவுக்கு விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்பட்டு அதை நுகர்வோருக்கு 950/=ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்து இருந்த கரட்டின் விலை அதிகரித்துள்ளது.
இதற்கமைய, கரட் ஒரு கிலோ கிராம் விவசாயிகளிடம் 1130/= ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டு, 1180/=ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக நுவரெலியா மத்திய பொருளாதார நிலைய காரியாலயம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |