கட்டுப்பாட்டு விலையை மீறி சீனி மற்றும் அரிசி விற்பனை : 77 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்
விலைப்பட்டியலை நுகர்வோருக்கு காட்சிப்படுத்தாத மற்றும் கட்டுப்பாட்டு விலையை விட கூடுதலான விலைக்கு சீனி மற்றும் அரிசி ஆகியவற்றை விற்பனை செய்த 77 வர்த்தகர்களுக்கு எதிராக குறிப்பிட்ட சில பிரதேச நீதி மன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பிரதானி உதய நாமல்கம தெரிவித்துள்ளார்.
இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் சில பகுதிகளில் கட்டுப்பாட்டு விலையை மீறி சீனி மற்றும் அரிசி ஆகியவற்றை கூடிய விலைக்கு விற்பனை செய்த 77 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திடீர் பரிசோதனை
இரத்தினபுரி மாவட்டத்தில், பலாங்கொட, பெல்மதுல்ல,எம்பிலிப்பிட்டிய கலவான மற்றும் இறக்குவான ஆகிய பகுதிகளில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோஸ்தர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |