ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த நடவடிக்கை
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி சில்வா மற்றும் உப தலைவர் பொருளாளர் ஆகியோரே விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக கொழும்பு நீதிமன்றில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த வழக்கில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை ரொஷான் ரணசிங்க அவமதித்தாக அவர் 2.4 பில்லியன் ரூபா நட்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிக்கை
மேலும், ரொஷான் ரணசிங்கவால் பொய்யான மற்றும் தீங்கான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இலங்கை கிரிக்கெட்டின் பெயருக்கும் கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கிரிக்கெட் நிறுவனத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள சேதத்தை சரிசெய்வதே இந்த சட்ட நடவடிக்கைகளின் நோக்கம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.