பதில் காவல்துறை மா அதிபருக்கு எதிராக வழக்கு: உடன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட்ட மூன்று காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக வழக்குத் தொடருமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய சட்டத்தரணிகள் குழுவான சட்டத்தரணிகளின் சங்கம் சட்டமா அதிபரிடம் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
முன்னாள் இராணுவ சிப்பாயின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்ற அடிப்படையில் மூவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் உயர்நீதிமன்றம் தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.
சட்டமா அதிபரின் கடமை
இருப்பினும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் தேசிய காவல்துறை ஆணைக்குழு எடுக்கவில்லை, இந்நிலையிலேயே சட்டமா அதிபரிடம் புதிய கோரிக்கையை சட்டத்தரணிகளின் சங்கம் விடுத்துள்ளது.
மேலும், இந்த மூவர் மீதும் வழக்கை தாக்கல் செய்யவேண்டியது சட்டமா அதிபரின் கடமை என்று சட்டத்தரணிகளின் சங்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.