இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு கிடைத்த பணப்பரிசு
ஆசிய கிண்ண மகளிர் ரி20 போட்டித் தொடரில் இலங்கை அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து அணிக்கான பணப்பரிசு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அதன் படி, இலங்கை மகளிர் அணிக்கு 150 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அதனை, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து பெற்றுக்கொண்டுள்ளார்.
ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்கள்
குறித்த நிகழ்வில் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவன தலைவர் ஷம்மி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கிண்ண மகளிர் ரி20 போட்டித் தொடரில் இலங்கை அணி பலம்பொருந்திய இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில், இறுதிப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வின் போது ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் பணப்பரிசு வழங்குவதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்கள் பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. (150 மில்லியன் ரூபா)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |