கிராமிய வங்கிகளை உடைத்துக் கொள்ளையிட்ட நபர்: வெளியாகிய அதிரச்சி காரணம்
இரு கூட்டுறவு கிராமிய வங்கிகளை உடைத்து திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (28) குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு (Colombo) - வென்னப்புவ, அங்கம்பிட்டி பகுதியில் உள்ள கூட்டுறவு கிராமிய வங்கியில் 6 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தினையும் ஜா-எல (Ja-Ela), கனுவான பகுதியிலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கியிலிருந்து 2 கோடி ரூபா பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தினையும் சந்தேகநபர் திருடியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கூறியுள்ளனர்.
கசினோ விளையாட்டு
இந்நிலையில், கைதுசெய்யப்பட்டவர் பிலியந்தலை மடபாத்த பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனவும், கசினோ விளையாட்டிற்கு அடிமையாகியுள்ள நிலையில் திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாககவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, ஆபரணங்களை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் களியாட்ட விடுதிகளுக்குச் சென்று கசினோ (Cassino) விளையாடியதாகவும் மற்றும் வென்னப்புவ பகுதியிலுள்ள நபரிடமிருந்து கார் ஒன்றை வாங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 13 மணி நேரம் முன்
