இலங்கை வந்த ஆங்கில பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: உதவுவோருக்கு 15 லட்சம் ரூபா பணம்
கொழும்பு (Colombo) புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை பேருந்து தரிப்பிடத்திலிருந்து எல்ல பிரதேசத்தை பார்வையிடுவதற்காக பேருந்தில் ஏறிய ஆங்கிலேய யுவதியொருவரின் பை திருடப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் யூடியூப் செயலியின் ஊடாக காணொளியொன்றை தயாரிப்பதற்காக குறித்த பெண் இந்த நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
இதன்படி, ஸ்கை மகோவன் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு ஆங்கிலப் பெண் என்பதுடன் அவர் பயணங்கள் தொடர்பான யூடியூப் செனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
திருட்டு சம்பவம்
இந்த நிலையில், தொடருந்து மூலம் எல்ல பிரதேசத்திற்கு செல்லவிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக தொடருந்து இரத்துச் செய்யப்பட்டதால் பேருந்து ஒன்றில் ஏறியுள்ளார்.
அதனை தொடர்ந்து, பேருந்தில் இருந்த இருவர் அவரது பையை திருடிச் சென்றமை பேருந்தின் பாதுகாப்பு காமராக்களின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தனது பை திருடப்பட்டதை அறிந்தவுடன் பேருந்து தரிப்பிடத்தில் இருந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளதுடன் கோட்டை காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.
5,000 டொலர் பணம்
அத்துடன், திருடப்பட்ட தனது பையில் விமான பற்றுச்சீட்டு, கேமரா, லேப்டாப் மற்றும் 2,000 டொலர் பணம் இருந்ததாக ஸ்கை மகோவன் கூறியுள்ளார்.
மேலும், பையைக் கண்டுபிடித்து அல்லது அதைப் பற்றிய தகவல்களை வழங்கும் எவருக்கும் 5,000 டொலர் (1513670.00 LKR) செலுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |