பாலிதவின் தேர்தல் கருத்தை எதிர்த்து கொழும்பில் போராட்டம்
சிறிகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) தலைமை காரியாலயத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தை மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் என்ற அமைப்பின் உறுப்பினர்களே முன்னெடுத்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர், பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara) நேற்றைய(28) ஊடக சந்திப்பில் முன்வைத்த கருத்தினை எதிர்த்தே தற்போது ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டம்
அதிபர் தேர்தலை 2 வருடங்கள் பிற்போடவேண்டும் என அவர் முன்வைத்த கருத்தானது ஜனநாயகத்துக்கு விரோதமானது என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
மேலும் உடனடியாக அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக காவல்துறையினர் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |