ரணிலின் தோல்வியை ஏற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி: ஜே.வி.பி பகிரங்கம்
இலங்கையின் அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பிற்போடவேண்டும் என்ற ஐக்கிய தேசியக்கட்சியின் (UNP) செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் (Palitha Range Bandara) கோரிக்கையை ஏற்கமுடியாதது என்று தேசிய மக்கள் சக்தி (JVP) தெரிவித்துள்ளது.
இது ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தோல்வியை ஐக்கிய தேசியக்கட்சி ஏற்றுக்கொள்வதற்கு சமனாகும் என்று கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ”இந்த நிலைமை தீவிரமான அறிக்கை என்பதோடு மக்களின் இறையாண்மையை மீறுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை.
அதிபரின் பதவிக்காலத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளாக நீடிக்க ஒரு வாக்கெடுப்பை நடத்த இந்த அறிக்கை பரிந்துரைக்கின்றது.
இதன் மூலம் எந்தவொரு தேர்தலிலும் ரணிலின் தோல்வியை ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் அதிகார பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தநிலையில், 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்ற கோட்டாபய ராஜபக்சவை Gotabaya Rajapaksa) மக்கள் வெளியேற்றியுள்ளனர்.
எனவே, 134 நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை வெளியேற்றுவது மக்களுக்கு ஒரு பெரிய காரியமல்ல என்பதை ஐக்கிய தேசியக்கட்சியினர் நினைவில் கொள்ள வேண்டும்“ என நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றை மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |