தேர்தல்கள் ஒத்திவைப்பு : நாமல் வெளியிட்ட அறிவிப்பு
தேர்தலை ஒத்திவைப்பது எந்த ஜனநாயகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என நாடாளுமன்ற உறுப்பினரும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச(namal rajapaksha) தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் மேற்கொண்ட பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை
அதிபர் மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பது ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Postponing elections is not healthy for any democracy. Extending the terms of the President and Parliament undermines the fundamental principles of a democratic society. Stability should come through the will of the people, not by delaying their voice.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 28, 2024
இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க ஏற்பாடுகள்
எதிர்வரும் இரண்டு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார(palitha range bandara) தெரிவித்திருந்தநிலையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.